ஒர்லான் ஓபன்: காலிறுதியில் காஷ்யப், சமீர்

  நந்தினி   | Last Modified : 30 Mar, 2018 06:02 pm


பிரான்சில் ஒர்லான் ஓபன் உலக சூப்பர் 100 பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் ஆண்கள் பிரிவு காலிறுதிச் சுற்றுக்கு இந்திய வீரர்கள் காஷ்யப் மற்றும் சமீர் முன்னேறியுள்ளனர். 

கடந்த மாதம் ஆஸ்திரேலியா ஓபன் பட்டத்தை வென்ற காஷ்யப், அயர்லாந்தின் ஜோஷுவா மகியை 21-11 21-14 என்ற நேர்செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார். அதே போல், சுவிஸ் சாம்பியனான சமீர் வர்மா 21-16 21-15 என பிரான்சின் தாமஸ் ரூஸேலை தோற்கடித்து காலிறுதிக்கு தகுதி பெற்றார். 

காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவரான காஷ்யப், காலிறுதியில் டென்மார்க் வீரர் ரேஸ்மாஸ் கெம்கேவை எதிர்கொள்கிறார். சமீர், பிரான்ஸ் வீரர் லூகாஸ் கோரவீயுடன் மோதுகிறார். 

ஆண்கள் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் பிரான்சிஸ் ஆல்வின்- நந்தகோபால் ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம் கண்டது. அந்த சுற்றில் இந்திய இணை, ஜெர்மன் கூட்டணியை சந்திக்கிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close