ஆசிய பேட்மின்டன் காலிறுதியில் சாய்னா, சிந்து, ஸ்ரீகாந்த்

  Newstm Desk   | Last Modified : 27 Apr, 2018 10:51 am


ஆசிய பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் சாய்னா, சிந்து, ஸ்ரீகாந்த் காலிறுதிச் சுற்றுக்குள் நுழைந்தனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் சீனாவின் காவோ பாங்கிஜியை 21-18 21-8 என்ற நேர்செட் கணக்கில் 40 நிமிடங்களில் சாய்னா நேவால் வென்று காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். அப்போட்டியில் தாய்லாந்தின் ராட்சாநோக் இன்டனோனை, சாய்னா எதிர்கொள்ள உள்ளார். 

மற்றொரு போட்டியில் பி.வி. சிந்து, 21-12 21-15 என்ற நேர்செட்களில் சீனாவின் சென் க்ஸிங்ஒக்ஸினை வீழ்த்தினார். காலிறுதியில் சிந்து, கொரியாவின் சுங் ஜி ஹியுனுடன் மோதுகிறார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில், ஹாங்காங்கின் வோங் விங் கி வின்சென்ட் ரிட்டையர்டு ஆனதால், நம்பர் ஒன் வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி காலிறுதிக்குள் நுழைந்ததாக அறிவிக்கப்பட்டது. அடுத்த ஆட்டத்தில் மூன்று முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றுள்ள லீ சோங் வெய்யை சந்திக்கிறார் கிடாம்பி.

சீன தைபேவின் வாங் ட்சு வெய்யை 16-21 21-14 21-12 என வீழ்த்தி காலிறுதியை எட்டினார் ஹெச்.எஸ். பிரணாய். காலிறுதியில் கொரியாவின் சான் வான் ஹோவை எதிர்கொள்ள இருக்கிறார் பிரணாய்.

ஆண்கள் மற்றும் பெண்கள் இரட்டையர் பிரிவில், இந்தியா இணைகள் தோல்வி கண்டு வெளியேறியது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close