காமன்வெல்த் போட்டியில் சாய்னா நேவால் தந்தை பங்கேற்க தடை!

  Newstm Desk   | Last Modified : 03 Apr, 2018 02:19 pm


காமன்வெல்த் போட்டியில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலின் தந்தை பங்கேற்பதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நாளை முதல் (4ம் தேதி) காமன்வெல்த் போட்டிகள் தொடங்க இருக்கின்றன. இந்த போட்டியில் பங்கேற்க இந்தியா, 218 போட்டியாளர்கள் உள்பட 326 பேருக்கு அனுமதி வழங்கியிருப்பது, இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

இந்த நிலையில், முன்னாள் நம்பர் ஒன் பேட்மிண்டன் வீராங்கனையான சாய்னா நேவால் தனது ட்விட்டர் பக்கத்தில், அவரது தந்தை ஹர்விர் சிங் போட்டியில் பங்கேற்க அனுமதி வழங்கவில்லை என்று தன் அதிருப்தியை தெரிவித்துள்ளார். 

அவர், "2018 காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கும் உறுப்பினர்களில் ஒருவராக இருந்த என் தந்தையின் பெயர் இடம் பெறாதது ஆச்சரியமாக உள்ளது. போட்டியில் என் தந்தை பங்கேற்பதற்கான முழு கட்டணத்தையும் நான் செலுத்தி உள்ளேன். ஆனால், உறுப்பினர் லிஸ்டில் எனது தந்தையின் பெயர் இடம் பெறாததால், அவரால் என் போட்டியை காண இயலாது. மேலும், அவரலால் என்னுடன் தங்கவும் முடியாது. என்னை பார்க்கவும் அவருக்கு அனுமதி வழங்கப்படாது. என்ன மாதிரியான ஆதரவு இது. என்னுடைய எல்லா போட்டிகளுக்கும் என் தந்தை என்னுடன் இருந்திருக்கிறார். எனக்கு இப்போதும் அவரது ஆதரவு தேவைப்படுகிறது. ஆனால், எதற்காக என் தந்தை போட்டியில் பங்கேற்க முடியாது என்பதை என்னிடம் முன்கூட்டியே தெரிவிக்கவில்லை என்பது தான் எனக்கு புரியவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார். 

கடந்த மூன்று காமன்வெல்த் போட்டிகளை சேர்த்து இந்தியா 215 பதக்கங்களை பெற்றுள்ளது. 2006ம் ஆண்டு 50 பதக்கம், 2010ல் 101 பதக்கம், 2014ல் 64 பதக்கம் வெல்லப்பட்டுள்ளது. இதில், சாய்னா நேவால் 2010ம் ஆண்டு தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close