பேட்மிண்டன் தரவரிசையில் முதலிடம் பிடித்தார் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிடாம்பி

  Newstm Desk   | Last Modified : 12 Apr, 2018 04:56 pm


உலக பேட்மிண்டன் சம்மேளனம் வெளியிட்ட புதிய தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி முதலிடத்தை பிடித்துள்ளார். 

பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் இருந்த டென்மார்க்கின் விக்டர் அஸேல்சனை பின்னுக்கு தள்ளி, 76,895 புள்ளிகளுடன் புதிய நம்பர் ஒன் வீரரானார் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிடாம்பி. உலக சாம்பியனான அஸேல்சன், 1,600 புள்ளிகளை இழந்து இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.

காமன்வெல்த் போட்டியில் ஸ்ரீகாந்த், தொடர்ந்து வெற்றியை பதிவு செய்தார். கடந்த ஆண்டு ஸ்ரீகாந்த், நான்கு சூப்பர்சீரிஸ் சாம்பியன் பட்டங்களை வென்று, உலகளவில் நான்கு சூப்பர் சீரிஸ் பட்டம் வெல்லும் நான்காவது வீரர் என்ற சாதனையை படைத்தார். இதைத் தொடர்ந்தே முதல் இடத்தைப் பிடித்திருக்கிறார் ஸ்ரீகாந்த்.

இதுவரை பேட்மிண்டன் போட்டி தர வரிசையில் முதல் இடம் பிடித்த இந்தியர் என்ற பெருமையை சாய்னா நேவால் பெற்றிருந்தார். தற்போது ஆண்கள் பிரிவில் முதல் இடத்தைப் பிடித்திருப்பதன் மூலம் சாய்னா நேவாலுக்கு அடுத்தபடியாக முதல் இடம் பிடித்த வீரர் என்ற பெருமையை ஸ்ரீகாந்த் பெற்றுள்ளார். சாய்னா மற்றும் ஸ்ரீகாந்தின் இந்த முன்னேற்றத்துக்கு காரணமாக இருந்தவர் பயிற்சியாளர் புல்லெலா கோபிசந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close