பேட்மின்டன் தரவரிசை: மீண்டும் டாப்-10ல் சாய்னா நேவால்

  Newstm Desk   | Last Modified : 30 Apr, 2018 01:14 pm


உலக பேட்மின்டன் சம்மேளனம் இன்று புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை சாய்னா நேவால் மீண்டும் டாப் 10ல் இடம் பிடித்துள்ளார். ஹெச்.எஸ்.பிரணாய் பேட்மின்டன் வரலாற்றில் சிறந்த தரவரிசையை பெற்றுள்ளார். 

பெண்கள் பிரிவு தரவரிசையில் காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற சாய்னா நேவால், இரண்டு இடங்கள் முன்னேறி, 10ம் இடத்தை பிடித்தார். பி.வி.சிந்து 3ம் இடத்தில் நீடிக்கிறார். சீன தைபேவின் தாய் ட்சு மீண்டும் முதலிடத்தை பிடித்தார். 

ஆண்கள் பிரிவில், விக்டர் அஸேல்சன் முதலிடத்தில் நீடித்து வருகிறார். ஸ்ரீகாந்த் கிடாம்பி, இரண்டு இடங்கள் ஏற்றம் கண்டு 3ம் இடத்தை பிடித்தார். ஹெச்.எஸ். பிரணாய், இரண்டு இடங்கள் முன்னேறி 8ம் இடத்தை பிடித்தார். சாய் பிரனீத் ஒரு இடம் ஏற்றதால் 18-வது இடத்தில் உள்ளார்.

ஆண்கள் இரட்டையரில், சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி - சிராக் ஷெட்டி இணை ஒரு இடம் ஏற்றம் கண்டு 18-வது இடத்தை பிடித்தது. கலப்பு பிரிவில், பிரணவ் ஜெர்ரி சோப்ரா - சிக்கி ரெட்டி இரண்டு இடம் இறங்கி 23-வது இடத்தில் உள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close