யுஎஸ் ஓபன் பேட்மின்டன்: 2-வது சுற்றில் அஜய் ஜெயராம்

  Newstm Desk   | Last Modified : 14 Jun, 2018 04:16 pm
ajay-jayaram-enters-2nd-round-of-us-open-badminton

இந்தியாவின் அஜய் ஜெயராம், யுஎஸ் ஓபன் பேட்மின்டன் போட்டியின் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறி உள்ளார். 

கலிஃபோர்னியாவின் பியூலர்ட்டோனில், யுஎஸ் ஓபன் உலக டூர் சூப்பர் 300 டோர்னமெண்ட் நடைபெற்று வருகிறது. இப்போட்டிக்கு காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள இந்திய வீரர் அஜய் ஜெயராம், கொரியாவின் யுன் க்யூ லீயை, துவக்க போட்டியில் எதிர்கொண்டார். இதில் ஜெயராம் 26-24, 17-21, 21-13 என்ற கணக்கில் லீயை வென்று, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். அந்த ஆட்டத்தில் ஜெயராம், உலக தரவரிசையில் 13ம் இடம் வகிக்கும் பிரேசிலின் யகோர் கோயல்ஹோவை எதிர்கொள்கிறார். 

மகளிர் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் இளம் வீராங்கனை அனுரா பிரபுதேசாய் 9-21, 17-21 என கனடாவின் ரேச்சல் ஹோண்டெறிச்சிடம் வீழ்ந்தார். 

ஆண்கள் இரட்டையரில், இந்தியாவின் மனு அத்ரி - சுமித் ரெட்டி இணை, இந்தோனேசியாவின் ரஹ்மத் அடியாண்டோ - ரங்கா யாவே ரைனோ கூட்டணியிடம் வீழ்ந்தது.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close