மலேசியா ஓபன் போட்டியில் இருந்து சாய்னா வெளியேற்றம்

  Newstm Desk   | Last Modified : 28 Jun, 2018 04:09 pm
saina-nehwal-crashes-out-of-malaysia-open

மலேசியா ஓபன் பேட்மின்டன் போட்டியில் இருந்து சாய்னா நேவால் வெளியேறினார். 

மலேசியாவின் கோலாலம்பூரில் உலக டூர் 750 பேட்மின்டன் தொடர் நடைபெற்று வருகிறது. மகளிர் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை இந்தியாவின் சாய்னா நேவால், உலக தரவரிசையில் 2ம் இடம் வகிக்கும் ஜப்பானின் யகனே யமாகுச்சியை சந்தித்தார். 

36 நிமிடங்கள் நடைபெற்ற அப்போட்டியில் சாய்னா 15-21, 13-21 என்ற கணக்கில் யமாகுச்சியிடம் தோல்வி கண்டு, தொடரில் இருந்து விலகினார். ஜப்பான் வீராங்கனையை 7 முறை சந்தித்துள்ள சாய்னாவின், 6-வது தோல்வி இதுவாகும். கடந்த 2014ம் ஆண்டு சீனா ஓபன் போட்டியில் கடைசியாக சாய்னா, யமாகுச்சியை வீழ்த்தி இருந்தார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close