மலேசியா ஓபன் அரையிறுதிக்கு சிந்து, ஸ்ரீகாந்த் முன்னேற்றம்

  Newstm Desk   | Last Modified : 29 Jun, 2018 06:22 pm
sindhu-srikanth-enters-semis-at-malaysia-open

மலேசியா ஓபன் பேட்மின்டன் அரையிறுதி சுற்றுக்கு சிந்து, ஸ்ரீகாந்த் முன்னேறினர். 

கோலாலம்பூரில் நடந்து வரும் மலேசியா ஓபன் தொடரில் இன்று நடந்த மகளிர் அரையிறுதி ஆட்டத்தில், ஒலிம்பிக் சாம்பியன் கரோலின் மரினுடன், பிவி சிந்து மோதினார். உலக தரவரிசையில் 3ம் இடம் வகிக்கும் சிந்து, 22-20, 21-19 என்ற கணக்கில் மரினை, 52 நிமிடங்களில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேற்றம் கண்டார். அந்த ஆட்டத்தில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனை தைவானின் தாய் டீஸு யிங்கை எதிர்கோன்ல்ல இருக்கிறார். 

ஆடவருக்கான பிரிவில், 4ம் இடம் வகிக்கும் ஸ்ரீகாந்த் 21-18, 21-14 என்ற நேர்செட்களில், தரவரிசையில் 22ம் இடம் வகிக்கும் லெவெர்டேஸை 39 நிமிடங்களில் வீழ்த்தினார். அரையிறுதியில் ஸ்ரீகாந்த், ஜப்பானின் கெண்டோ மோமோடாவுடன் மோதுவார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close