இந்தோனேசியா ஓபன்: லெஜெண்ட் வீரரை வீழ்த்தினார் பிரணாய்

  Newstm Desk   | Last Modified : 04 Jul, 2018 10:35 am
hs-prannoy-defeats-legend-lin-dan-in-indonesia-open

இந்தோனேசியா ஓபன் தொடரில் பேட்மின்டன் லெஜெண்டை வீழ்த்தினார் இந்திய வீரர் ஹெச்.எஸ். பிரணாய். 

ஜகார்த்தாவில் உலக டூர் சூப்பர் 1000 பேட்மின்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் ஆடவர் துவக்க ஆட்டத்தில், 13ம் இடம் வகிக்கும் இந்தியாவின் பிரணாய், 21-15, 9-21, 21-14 என்ற கணக்கில் வென்று, லெஜெண்ட் வீரர் 8ம் இடத்தில் இருக்கும் சீனாவின் லின் டானுக்கு அதிர்ச்சி அளித்தார். 

இந்த வெற்றி குறித்து பிரணாய் தெரிவிக்கையில், "நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இரண்டு மாதம் போட்டியில் பங்கேற்கவில்லை. அதன் பின் தொடருக்குள் வந்தது சிறப்பாக உள்ளது. என்னுடைய கடினமான சூழ்நிலையில், லின் டானுடனான மிகப்பெரிய வெற்றி மேலும் சிறப்பை கொடுத்திருக்கிறது" என்றார்.

அடுத்த சுற்றில் பிரணாய், சீன தைபேவின் வாங் டீஸு வெயுடன் மோதுகிறார். வாங் டீஸு, முதல் போட்டியில் இந்தியாவின் சாய் பிரனீத்தை 21-10, 21-13 என்ற நேர்செட்களில் வென்றிருந்தார்.

மகளிர் ஒற்றையர் பிரிவில், சாய்னா நேவால் 21-12, 21-12 என்ற நேர்செட் கணக்கில் இந்தோனேசியாவின் ஆயுஸ்ட்டினை 35 நிமிடத்தில் வீழ்த்தினார். 

பிற போட்டிகளில், சமீர் வர்மா  21-9, 12-21, 22-20 என டென்மார்க்கின் ரஸ்முஸ் கெம்கேவை ஒற்றையர் பிரிவு துவக்க போட்டியில் தோற்கடித்தார். இரட்டையர் ஆட்டத்தில் இந்தியாவின் மகளிர் இணை ஜக்கம்புடி மேகனா - பூர்விஷா ராம் தோல்வி கண்டு வெளியேறினர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close