இந்தோனேசியா ஓபன் காலிறுதியில் பி.வி. சிந்து

  Newstm Desk   | Last Modified : 06 Jul, 2018 11:25 am
pv-sindhu-advances-into-quater-finals-of-indonesia-open

இந்தோனேசியா ஓபன் போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு பி.வி. சிந்து முன்னேறினார். 

ஜகார்தா நகரில் இந்தோனேசியா ஓபன் பேட்மின்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் மகளிர் பிரிவில், உலகளவில் 3ம் இடம் வகிக்கும் சிந்து, 36 நிமிடத்தில் 21-17, 21-14 என்ற நேர்செட் கணக்கில், 17ம் இடம் வகிக்கும் சீனாவின் அயா ஓஹோரியை வீழ்த்தினார். இதன் மூலம் காலிறுதிக்கு முன்னேறிய சிந்து, அந்த ஆட்டத்தில் சீனாவின் பிங்ஜியோவை எதிர்கொள்கிறார். 

முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை சாய்னா நேவால், 18-21, 15-21 என சீனாவின் சென் யூபியிடம் தோல்வி கண்டு வெளியேறினார்.

ஆடவர் பிரிவில், இந்தியாவின் ஹெச்.எஸ். பிரணாய் 21-23, 21-15, 21-13 என்ற நேர்செட்களில் சீன தைபேவின் வாங் டீஸு வெய்யை தோற்கடித்து, காலிறுதிக்குள் நுழைந்தார். அடுத்த சுற்றில் பிரணாய், உலக தரவரிசையில் 3ம் இடத்தில் இருக்கும் சீனாவின் ஷி யுக்கியை சந்திக்கிறார். 

சமீர் வர்மா 15-21, 14-21 என நம்பர் ஒன் வீரர் விக்டர் அஸேல்சனிடம் தோல்வி அடைந்து வெளியேறினார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close