தாய்லாந்து ஓபன் பட்டத்தை தவறவிட்டார் பி.வி. சிந்து

  Newstm Desk   | Last Modified : 16 Jul, 2018 11:59 am
pv-sindhu-loses-in-thailand-open-final

தாய்லாந்து ஓபன் இறுதிச் சுற்று போட்டியில் பி.வி. சிந்து போராடி தோல்வி அடைந்தார். 

தாய்லாந்து ஓபன் உலக டூர் சூப்பர் 500 பேட்மின்டன் தொடர் பாங்காக்கில் நடைபெற்றது. இத்தொடரின் மகளிர் இறுதிப் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து, ஜப்பானின் நோஸ்ஓமி ஒகுஹராவுடன் மோதினார். 

தரவரிசையில் 2ம் இடம் வகிக்கும் சிந்து, உலக சாம்பியனான ஒகுஹராவுடன் 50 நிமிட போராட்டம் நடத்தினார். முடிவில் சிந்து 15-21, 18-21 ஒகுஹராவிடம் தனது முதல் தாய்லாந்து ஓபன் பட்டத்தை தவறவிட்டார். 

ஆடவர் இறுதிச் சுற்று ஆட்டத்தில், ஜப்பானின் கன்டா சுனியமா 21-16, 13-21, 21-9 என்ற கணக்கில் இந்தோனேஷியாவின் டாமி சுகியார்டோவை வீழ்த்தி, பட்டத்தை கைப்பற்றினார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close