சிங்கப்பூர் ஓபனில் இருந்து இந்திய அணி வெளியேறியது

  Newstm Desk   | Last Modified : 20 Jul, 2018 11:02 am
indian-badminton-team-bow-out-of-singapore-open

சிங்கப்பூர் ஓபன் தொடரில் இருந்து இந்திய பேட்மின்டன் அணி தோல்வி அடைந்து வெளியேறியுள்ளது. 

சிங்கப்பூரில் உலக டூர் சூப்பர் 500 பேட்மின்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் முன்னணி வீரர் சௌரப் வர்மா 21-18, 15-21, 11-21 என்ற கணக்கில் வியட்நாமின் டைன் மின்ஹிடம், 56 நிமிடங்களில் தோல்வி அடைந்தார். 

மற்றொரு போட்டியில், டைன் மின்ஹிடம் 13-21, 14-21 என சுபாங்கர் டேவும் தோல்வியுற்றார்.

மகளிர் பிரிவின் 2-வது போட்டியில், ரிதுபர்ணா தாஸ் 21-15, 13-21, 16-21 என இந்தோனேசியாவின் யூலியா யோசெபினிடம் வீழ்ந்தார். இன்னொரு ஆட்டத்தில், 8-21, 15-21 என்ற கணக்கில் ருத்விகா ஷிவானியும் தோல்வி கண்டார். 

கலப்பு இரட்டையர் பிரிவிலும், இந்திய இணையான சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி - அஷ்வினி பொன்னப்பா; ஆடவர் இரட்டையர் பிரிவில், சாத்விக்சாய்ராஜ் - சிராக் ஷெட்டி ஜோடியும் தோல்வியடைந்து வெளியேறினர்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close