உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப்: சாய்னா, ஸ்ரீகாந்த் வெற்றி

  Newstm Desk   | Last Modified : 31 Jul, 2018 05:23 pm
saina-srikanth-enters-into-2nd-round-of-bwf-world-championship

உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் துவக்க போட்டியில் சாய்னா நேவால், கிடாம்பி ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றுள்ளனர். 

சீனாவின் நஞ்சிங்கில் உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு துவக்க ஆட்டத்தில், இந்தியாவின் முன்னணி வீராங்கனை சாய்னா நேவால், 21-17, 21-8 என்ற நேர்செட் கணக்கில் துருக்கியின் அலியே தெமிர்பேக்கை வீழ்த்தினார். இரண்டாவது போட்டியில், தாய்லாந்தின் ரட்சனோக் இந்தநோனுடன் மோதுகிறார். 

5ம் இடம் வகிக்கும் ஸ்ரீகாந்த், 21-15, 21-16 என அயர்லாந்தின் நஹத் ங்குயினை தோற்கடித்தார். அடுத்த சுற்றில் ஸ்பெயினின் பாப்லோ அபியானை சந்திக்கிறார் ஸ்ரீகாந்த்.

ஸ்பெயினின் லுயிஸ் என்றிக் பெனல்வருடன், 2-வது சுற்றில் சாய் பிரனீத் மோதுகிறார். சாத்விக்சாய்ராஜ் - அஷ்வினி பொன்னப்பா இணை, காலிறுதிக்கு முந்தைய சுற்றில் மலேசிய கூட்டணியுடன் மோத உள்ளன. 

இந்திய இணைகளான ரோஹன் கபூர் - குஹு கார்க், அர்ஜுன் - ராமசந்திரன், பிரணவ் செர்ரி - சிக்கி ரெட்டி, தருண் கோனா - சௌரப் சர்மா தோல்வி கண்டு வெளியேறியது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close