உலக சாம்பியன்ஷிப்: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பிரனீத், சிந்து

  Newstm Desk   | Last Modified : 02 Aug, 2018 12:59 pm
sai-praneeth-pv-sindhu-advances-into-pre-quaters-of-bwf-world-championship

உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பங்கேற்க சாய் பிரனீத், பிவி சிந்து தகுதி அடைந்துள்ளனர். 

சீனாவின் நஞ்சிங் நகரில் உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டியில், நம்பர் 2 வீராங்கனை பிவி சிந்து 21-14, 21-9 என்ற நேர்செட் கணக்கில் இந்தோனேசியாவின் ஃபித்ரியானியை தோற்கடித்தார். அடுத்த சுற்றில் சிந்து, தென் கொரியாவின் ஹியுன் சங்குடன் மோதுகிறார். 

ஆடவர் ஒற்றையர் பிரிவில், சாய் பிரனீத் 21-18 21-11 என்ற கணக்கில் ஸ்பெயினின் லூயிஸ் என்றிக்கை வீழ்த்தினார். டென்மார்க்கின் ஹான்ஸ் கிறிஸ்டைனை, அடுத்த சுற்றில் எதிர்கொள்கிறார் பிரனீத். 

முன்னதாக இந்தியாவின் முன்னணி வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குள் நுழைந்தார். 

இந்தியாவின் சமீர் வர்மா, ஹெச்.எஸ். பிரணாய், அதிர்ச்சி தோல்வி கண்டு, தொடரில் இருந்து வெளியேறினர். இவர்களை தவிர ஆடவர் இரட்டையர் பிரிவில், ராங்கி ரெட்டி - சிராக் ஷெட்டி மற்றும் மனு அத்ரி - சுமித் ரெட்டி இணைகள்; மகளிர் இரட்டையர் பிரிவில், அஷ்வினி பொன்னப்பா - சிக்கி ரெட்டி கூட்டணியும் தோல்வி அடைந்து வெளியேறியது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close