உலக சாம்பியன்ஷிப் காலிறுதிக்குள் நுழைந்தார் சாய்னா நேவால்

  Newstm Desk   | Last Modified : 02 Aug, 2018 04:34 pm
saina-nehwal-cruises-into-quaters-of-bwf-world-championship

உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு சாய்னா நேவால் முன்னேறினார். மேலும், இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி, அஷ்வினி பொன்னப்பா கலப்பு இணையும் காலிறுதிக்கு தகுதிப் பெற்றது.

உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டி, சீனாவின் நஞ்சிங்கில் நடந்து வருகிறது. இன்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில், சாய்னா நேவால் 21-16, 21-19 என்ற நேர்செட் கணக்கில் தாய்லாந்தின் ரட்சனோக் இன்டனோனை தோற்கடித்து, காலிறுதிக்கு முன்னேறினார்.

கலப்பு பிரிவின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், ராங்கிரெட்டி - அஷ்வினி பொன்னப்பா இணை, மலேசியாவின் கோஹ் சூன் ஹயாட் - ஷெவோன் ஜெமெய் லாய் ஜோடியுடன் மோதியது. 

59 நிமிடங்கள் நடைபெற்ற இந்த போட்டியில், ராங்கிரெட்டி - அஷ்வினி இணை, 20-22, 21-14, 21-6 என்ற கணக்கில் மலேசிய கூட்டணியை வீழ்த்தியது. இதன் மூலம் காலிறுதிக்கு முன்னேறிய இந்திய கூட்டணி, அப்போட்டியில் சீனாவின் செங் சிவெய் - ஹுவாங் யாக்கியங் இணையுடன் மோதுகின்றது.

மற்றொரு கலப்பு பிரிவில் திஜு - ஜவாலா கட்டா இணையும் காலிறுதிக்கு முன்னேறியது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close