டாப் 10ல் இருந்து வெளியேறினார் சாய்னா நேவால்

  Newstm Desk   | Last Modified : 10 Aug, 2018 06:14 pm
saina-nehwal-out-of-top-10-in-bwf-rankings

பேட்மின்டன் தரவரிசையில் டாப் 10ல் இருந்து வெளியேறினார் இந்தியாவின் முன்னணி வீராங்கனை சாய்னா நேவால். அதே போல், கிடாம்பி ஸ்ரீகாந்தும் தரவரிசையில் பின்னுக்கு தள்ளப்பட்டார். 

உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியாவின் பிவி சிந்து, 3-வது இடத்தில் நீடிக்கிறார். அப்போட்டியில் சிறப்பாக செயல்படாத காரணத்தினால் சாய்னா நேவால், ஒரு இடம் இறங்கி 11-வது இடத்தை பிடித்தார். 

ஹெச்.எஸ். பிரணாய், 11-வது இடத்தில் நீடித்து வருகிறார். சாய் பிரனீத், 2 இடங்கள் ஏற்றம் கண்டு 24-வது இடத்தை பிடித்துள்ளார். சமீர் வர்மா, 2 இடங்கள் பின் தங்கி 21-வது இடத்தை பிடித்தார். 

கலப்பு பிரிவில், அஷ்வினி பொன்னப்பா - ராங்கி ரெட்டி, 12 இடங்கள் ஏற்றம் கண்டு 28-வது இடத்தை பிடித்துள்ளனர். 

ஆடவர் இரட்டையரில், சாத்விக் - சிராக், இரு இடங்கள் ஏறி 23-வது இடத்தில் உள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close