வியட்நாம் ஓபன்: இறுதிச் சுற்றில் அஜய் ஜெயராம்

  Newstm Desk   | Last Modified : 11 Aug, 2018 06:36 pm
ajay-jayaram-advances-into-vietnam-open-final

இந்திய முன்னணி பேட்மின்டன் வீரனான அஜய் ஜெயராம், வியட்நாம் ஓபன் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். 

ஹோ கை முன்ஹ் நகரத்தில் வியட்நாம் ஓபன் பேட்மின்டன் போட்டி நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த ஜெயராம், மீண்டும் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். தனது சிறந்த கம்பேக்கை கொடுக்க முயற்சி செய்து வரும் ஜெயராம், அரையிறுதியில் ஜப்பானின் யு இகராஷியை எதிர்கொண்டார். 

34 நிமிடம் நடந்த அப்போட்டியில் ஜெயராம், 21-14, 21-19 என்று நேர்செட் கணக்கில் இகராஷியை தோற்கடித்து, இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தார். 

இறுதிப் போட்டியில் இந்தோனேசியாவின் 79ம் இடம் வகிக்கும் ஷேசர் ஹிரேன் ரஹுஸ்டவிட்டோவுடன் மோதுகிறார். இறுதி ஆட்டத்தில் ஜெயிக்கும் வீரருக்கு 75,000 டாலர் பரிசுத் தொகையாக கிடைக்கும்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close