ஆசிய விளையாட்டுப் போட்டி: காலிறுதியில் சாய்னா நேவால்

  Newstm Desk   | Last Modified : 25 Aug, 2018 12:49 pm
saina-nehwal-enter-quater-finals-in-asian-games

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய பேட்மின்டன் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் காலிறுதிக்கு தகுதி பெற்றார். 

இந்தோனேசியாவின் ஜகார்தா மற்றும் பலேம்பாங்கில் 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது. மகளிர் பேட்மின்டன் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில், இந்தியாவின் முன்னணி வீராங்கனனி சாய்னா, இந்தோனேசியாவின் பிட்ரியானியை எதிர்கொண்டார். 31 நிமிடங்கள் நடைபெற்ற இப்போட்டியில் சாய்னா 21-6, 21-14 என்ற நேர்செட் கணக்கில் பிட்ரியானியை தோற்கடித்து, காலிறுதிக்குள் நுழைந்தார். 

நடக்க இருக்கும் மற்றொரு ஒற்றையர் போட்டியில் பிவி சிந்து, இந்தோனேசியாவின் டங்ஜங் கிரிகோராவுடன் மோதுகிறார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close