ஏசியன் கேம்ஸ்: பேட்மின்டனில் வரலாற்றுச் சாதனை; இறுதிச் சுற்றில் பிவி சிந்து

  Newstm Desk   | Last Modified : 27 Aug, 2018 03:21 pm
asian-games-pv-sindhu-enter-into-gold-medal-match

பேட்மின்டன் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கத்திற்காக இறுதிச் சுற்றில் சீன தைபே வீராங்கனையுடன் மோதுகிறார் பிவி சிந்து. 

18-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று நடந்த பேட்மின்டன் அரையிறுதி ஆட்டத்தில், பிவி சிந்து - ஜப்பானின் யகனே யமகுச்சியுடன் மோதினார். இதில் சிந்து 21-17, 15-21, 21-10 என்ற கணக்கில் யமகுச்சியை வென்று, இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தார். 

இதன் மூலம், ஆசிய விளையாட்டுப் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய பேட்மின்டன் வீராங்கனை என்ற சாதனையை படைத்தார் சிந்து. 

36 வருடங்களுக்குப் பிறகு இப்போட்டியில் பேட்மின்டன் ஒற்றையர் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை சாய்னா நேவால் பெற்றார். அவர் அரையிறுதியில் வெண்கலப் பதக்கத்தை பெற்றிருந்தார். 

1982ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஆண்கள் பேட்மின்டன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சையத் மோடி வெண்கலப்பதக்கம் வென்றிருந்தார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close