ஜப்பான் ஓபன்: சிந்து, ஸ்ரீகாந்த், பிரணாய் முன்னேற்றம்

  Newstm Desk   | Last Modified : 12 Sep, 2018 12:19 pm
pv-sindhu-kidambi-srikanth-hs-prannoy-enters-into-2nd-round-of-japan-open-bwf

ஜப்பான் ஓபன் பேட்மின்டன் போட்டியில் இந்தியாவின் முன்னணி போட்டியாளர்கள் பிவி சிந்து, கிடாம்பி ஸ்ரீகாந்த், ஹெச்எஸ் பிரணாய் ஆகியோர் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். 

டோக்கியோவில் ஜப்பான் ஓபன் பேட்மின்டன் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு துவக்க போட்டியில், 3ம் இடம் வகிக்கும் பிவி சிந்து 53 நிமிடங்களில் 21-17, 7-21, 21-13 என்ற கணக்கில் ஜப்பானின் சயகா தகஹாஷியை தோற்கடித்தார். 

இரண்டாவது சுற்றில் சிந்து, சீனாவின் பாங்கிஜி காவோவை எதிர்கொள்கிறார். காவோ, துவக்க போட்டியில் இந்தியாவின் ஜக்கா வைஷ்ணவி ரெட்டியை வீழ்த்தினார். 

ஆடவர் ஒற்றையர் பிரிவில், ஹெச்எஸ் பிரணாய் 21-18, 21-17 என இந்தோனேசியாவின் அந்தோணியையும்; ஸ்ரீகாந்த் 21-13, 21-15 என்ற கணக்கில் ஹாங்காங்கின் வின்சென்ட் வோங் விங் கியையும் வீழ்த்தினர். மற்றொரு துவக்க ஆட்டத்தில் சமீர் வர்மா தோல்வி அடைந்தார். 

கலப்பு இரட்டையர் பிரிவில், பிரணவ் - சிக்கி ரெட்டி இணை 2-வது சுற்றுக்கு முன்னேற்றம் கண்டது. அடுத்த சுற்றில் பிரணவ் - சிக்கி ஜோடி மலேசியா கூட்டணியை எதிர்கொள்ள இருக்கிறது. சாத்விக் சாய்ராஜ் - அஷ்வினி பொன்னப்பா கூட்டணி தோல்வி அடைந்து வெளியேறியது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close