காலிறுதியில் ஸ்ரீகாந்த் தோல்வி; ஜப்பான் ஓபனில் இருந்து இந்தியா வெளியேறியது

  Newstm Desk   | Last Modified : 14 Sep, 2018 11:39 am
srikanth-kidambi-crashes-out-as-india-s-campaign-ends-at-japan-open

ஜப்பான் ஓபன் காலிறுதியில் தோல்வி அடைந்து ஸ்ரீகாந்த் கிடாம்பி தொடரில் இருந்து விலகினார். ஏற்கனவே பிவி சிந்து, ஹெச்எஸ் பிரணாய் போட்டியில் தோல்வி கண்டதால், ஜப்பான் ஓபனில் இந்தியாவின் பிரச்சாரம் முடிவடைந்தது. 

டோக்கியோவில் ஜப்பான் ஓபன் பேட்மின்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிடாம்பி, காலிறுதிக்கு முன்னேறியிருந்தார். நேற்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் ஸ்ரீகாந்த், கொரியாவின் லீ டோங் கெயினுடன் மோதினார். ஒரு மணி நேரம் 19 நிமிடம் நடந்த இப்போட்டியில் ஸ்ரீகாந்த் 21-19, 16-21, 18-21 என கெயினிடம் வீழ்ந்தார். 

முன்னதாக இந்திய போட்டியாளர்கள் பிவி சிந்து, பிரணாய் இரண்டாவது சுற்றிலேயே தோல்வி அடைந்தனர். மேலும், இரட்டையர் பிரிவிலும் இந்திய கூட்டணிகள் இரண்டாவது சுற்றிலேயே வெளியேறியதால், ஜப்பான் ஓபன் தொடரில் இந்தியாவின் பிரச்சாரம் முடிந்தது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close