பேட்மின்டன் தரவரிசை: டாப் 10ல் பிவி சிந்து, ஸ்ரீகாந்த் கிடாம்பி

  Newstm Desk   | Last Modified : 14 Sep, 2018 03:35 pm
pv-sindhu-srikanth-kidambi-retain-spots-in-top-10

பேட்மின்டன் தரவரிசையில் இந்தியாவின் முன்னணி போட்டியாளர்களான பிவி சிந்து மற்றும் கிடாம்பி ஸ்ரீகாந்த் மட்டுமே டாப் 10-க்குள் இடம் பிடித்துள்ளனர். 

ஜப்பான் ஓபன் காலிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த ஸ்ரீகாந்த், ஆடவர் தரவரிசையில் 63,835 புள்ளிகளுடன் மீண்டும் தனது 8-வது இடத்தை பிடித்தார். டென்மார்க்கின் விக்டர் அஸேல்சென் 83,754 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார். சீனாவின் ஷி யுக்கி 2-வது, மலேசியாவின் லீ சோங் வெய் 3-வது இடத்தில் உள்ளனர். 

மகளிர் ஒற்றையர் பிரிவில், பிவி சிந்து 85,414 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் நீடிக்கிறார். தைவானின் தாய் டீஸு யிங் 98,317 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஜப்பானின் யகனே யாமாகுச்சி 87,743 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளனர். 

மற்றொரு இந்திய நட்சத்திரமான சாய்னா நேவால் 58,014 புள்ளியுடன் 10-வது இடத்தில் இருக்கிறார். 

இந்திய ஆடவர், மகளிர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவு போட்டியாளர்கள் எவரும் டாப் 10ல் இடம் பிடிக்கவில்லை.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close