சீனா ஓபன்: பிவி சிந்து முன்னேற்றம்; சாய்னா வெளியேற்றம்

  Newstm Desk   | Last Modified : 18 Sep, 2018 03:49 pm
pv-sindhu-enters-pre-quaters-of-china-open

சீனா ஓபன் பேட்மின்டன் போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு பிவி சிந்து முன்னேறினார். அதே சமயம் சாய்னா நேவால் தோல்வி அடைந்து வெளியேறினார். 

சாங்சவ் நகரில் சீனா ஓபன் உலக டூர் சூப்பர் 1000 பேட்மின்டன் தொடர் நடைபெற்று வருகிறது. தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு துவக்க ஆட்டத்தில், 2016 சாம்பியனான 3ம் இடம் வகிக்கும் பிவி சிந்து 21-15, 21-13 என்ற நேர்செட் கணக்கில் 39ம் இடத்தில் இருக்கும் ஜப்பானின் சேனா கவகாமியை தோற்கடித்தார். 

மற்றொரு ஒற்றையர் ஆட்டத்தில், சாய்னா நேவால் 22-20, 8-21, 14-21 என கொரியாவின் சங் ஜி ஹியுனிடம் வீழ்ந்தார். 2014ம் ஆண்டு சீனா ஓபன் பட்டத்தை கைப்பற்றிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றவர் சாய்னா நேவால். 

ஆடவர் இரட்டையர் பிரிவு போட்டியில், தேசிய சாம்பியனான மனு அத்ரி - சுமித் ரெட்டி இணை 13-21, 21-13, 21-12 என்ற கணக்கில் சீன தைபேவின் லியா மின் சுன் - சு சிங்க் ஹேங் இணையை வீழ்த்தி, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close