லிவர்பூலை தடுத்து நிறுத்தியது மான்செஸ்டர் சிட்டி!

  shriram   | Last Modified : 08 Oct, 2018 05:19 am
premier-league-manchester-city-hold-liverpool

பிரீமியர் லீக்கில் தொடர்ந்து அதிரடி காட்டி வரும் மான்செஸ்டர் சிட்டி மற்றும் லிவர்பூல் அணிகள் மோதிய போட்டி, கோல் எதுவும் இன்றி டிரா ஆனது. 

நடப்பு சாம்பியன்களான மான்செஸ்டர் சிட்டி, பயிற்சியாளர் கிளாப் தலைமையில் அதிரடியாக விளையாடி வரும் லிவர்பூலுடன் மோதியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில், லிவர்பூல் ஆதிக்கம் செலுத்தியது. ஆரம்பத்தில் இருந்தே, லிவர்பூலின் நட்சத்திர வீரர் சாலா தலைமையில் தொடர் அட்டாக் செய்து சிட்டியை நடுங்க வைத்தது லிவர்பூல். முதல் 15 நிமிடங்களுக்கு லிவர்பூல் கடும் நெருக்கடி கொடுத்தது. 

ஆனால், அதன்பின் சிட்டி கொஞ்சம் கொஞ்சமாக அட்டாக் செய்தது. இரு அணிகளும் மாற்றி மாற்றி கோல் முயற்சிகள் எடுத்தாலும், முதல் பாதி டிராவாகவே முடிந்தது. இரண்டாவது பாதியிலும் இரு அணிகளின் அதிரடி ஆட்டம் தொடர்ந்தது. லிவர்பூல் சிறப்பாக விளையாடி கோல் அடிக்க நெருங்கியது. ஆனால், சிட்டி சிறப்பாக டிபெண்ட் செய்தது. 84வது நிமிடத்தில், சிட்டி வீரர் சானேவை லிவர்பூல் வீரர் வேன் டைக் பவுல் செய்தார். இதனால், சிட்டிக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அதை மாஹ்ர்ஸ், கோல் போஸ்டுக்கு மேலே தள்ளி வீணடித்தார். போட்டி கோல் எதுவும் இன்றி டிரா ஆனது. 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close