பேட்மிண்டன் லீக் ஏலம்: சிந்து, சாய்னாவுக்கு ரூ.80 லட்சம்!

  Newstm Desk   | Last Modified : 09 Oct, 2018 05:39 am
pdl-saina-sindhu-go-for-highest-bids

பிரீமியர் பேட்மிண்டன் லீக் தொடரில் வீரர்களை அணிகள் வாங்குவதற்கான ஏலத்தில், நட்சத்திர இந்திய வீராங்கனைகள் சாய்னா மற்றும் சிந்துவை ரூ.80 லட்சம் என்ற உச்சகட்ட தொகையை கொடுத்து அணிகள் எடுத்துக் கொண்டன. 

புதுடெல்லியில் நடைபெற்ற பிரீமியர் பேட்மிண்டன் லீக் ஏலத்தில், ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கத்தை வென்ற கரோலினா மரினை ரூ.80 லட்சம் கொடுத்து எடுத்துக்கொண்டது புனே 7 ஏசஸ் அணி. நட்சத்திர வீராங்கனைகள் சாய்னா நேவாலை, நார்த் ஈஸ்ட் வாரியஸ் அணியும்,  பிவி சிந்துவை ஹைதராபாத் ஹன்டர்ஸ் அணியும் தலா ரூ.80 லட்சம் கொடுத்து ஏலத்தில் எடுத்துக் கொண்டன. கடந்த 3 தொடர்களிலும், சாய்னா அவாதே வாரியர்ஸ் அணிக்காக விளையாடியது குறிப்பிடத்தக்கது. உலகின் 9ம் நிலை வீராங்கனையான சங் ஜி ஹியூனை, சென்னை ஸ்மாஷர்ஸ் அணி ரூ.80 லட்சம் கொடுத்து எடுத்துக் கொண்டது. 

ஆடவர்களுக்கான ஏலத்தில், டென்மார்க்கின் விக்டர் ஆக்சல்சன்னை அஹமதாபாத் அணியும், கிடாம்பி ஸ்ரீகாந்தை பெங்களூரு அணியும், பிரணாயை டெல்லி அணியும் ரூ.80 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தன. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close