டென்மார்க் ஓபன்: சாய்னா நெவால் வெள்ளி வென்றார்

  Newstm Desk   | Last Modified : 21 Oct, 2018 09:15 pm
saina-nehwal-goes-down-fighting-against-tai-tzu-ying

டென்மார்க் ஓபன் பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நெவால் தோல்வி அடைந்து வெள்ளி பதக்கத்தை வென்றார்.

இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையான சாய்னா நெவால், டென்மார்க் ஓப்பன் இறுதிப் போட்டியில், உலகின் முதல் நிலை வீராங்கனையாக இருக்கும் தாய்வானின் தை சூ இங்கை எதிர்கொண்டார்.

ஏற்கனவே பலமுறை தை சூ இங்கை சாய்னா எதிர்கொண்டிருந்தாலும், கடந்த 2013 ஆம் ஆண்டிற்குப் பிறகு, சாய்னா அவரிடம் ஒருமுறை கூட வென்றதில்லை. இதுவரையில் நடைபெற்ற போட்டிகளில் தை சூ இங் 13 போட்டிகளிலும், சாய்னா 5 போட்டிகளிலும் வென்றிருந்தனர்.

இதையடுத்து, மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில், தொடக்கத்திலேயே தை சூ இங் ஆதிக்கம் செலுத்தினார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், முதல் சுற்றை 13-21 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

இதைத் தொடர்ந்து சுதாரித்துக் கொண்டு விளையாடிய சாய்னா, இரண்டாவது சுற்றில் தை சூவுக்கு பதிலடி கொடுத்து, இரண்டாவது சுற்றை 21-13 என்ற கணக்கில் கைப்பற்றினார். இதனையடுத்து வெற்றியைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் இறுதி சுற்றில், தை சூ அதிரடியாக விளையாடி 6-21 என்ற கணக்கில் இறுதி செட்டைக் கைப்பற்றினார்.

இதன்மூலம், தை சூ போட்டியை வென்றதோடு மட்டுமில்லாமல், டென்மார்க் ஓபன் பட்டத்தையும் கைப்பற்றியுள்ளார். மேலும் சாய்னா வெள்ளி பதக்கம் வென்றார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close