உலக ஜூனியர் பாட்மிண்டன்:  இலங்கையை வீழ்த்தியது இந்தியா

  டேவிட்   | Last Modified : 06 Nov, 2018 08:34 am
world-junior-badminton-india-beat-sri-lanka

உலக ஜூனியர் பாட்மிண்டன்:  இலங்கையை வீழ்த்தியது இந்தியா

கனடாவின் மார்கம் நகரில் நேற்று தொடங்கிய உலக ஜூனியர் பாட்மிண்டன் போட்டியில், இந்தியா தனது தொடக்க ஆட்டத்தில் , இந்தியா 3-0 என்ற புள்ளிக்கணக்கில் இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

உலக ஜூனியர் பாட்மிண்டன் போட்டி கனடாவில் நேற்று தொடங்கியது. 18-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இப்போட்டியில் ஆசிய ஜூனியர் சாம்பியன் லக்ஷயா சென் தலைமையில் 23 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்று வருகிறது.

உலக ஜூனியர் பாட்மிண்டன் போட்டியில், இந்தியா இதுவரை எந்த பதக்கத்தையும் வெல்லவில்லை. சீனா, இந்தோனேஷியா, தென் கொரியா, தாய்லாந்து, இந்தியா தரவரிசைப் பட்டியலில் முதல் 5 இடங்களில் உள்ளன.

இப்போட்டியில், கிரண் ஜார்ஜ், பிரியான்ஷ் ரஜாவாத், அலப் மிஸ்ரா சிறுவர் பிரிவிலும், மாளவிகா பன்சோட், காயத்திரி கோபிச்சந்த் மகளிர் பிரிவிலும் நம்பிக்கை தருகின்றனர்.

தனி நபர் பிரிவில் கடந்த 2008-இல் சாய்னா நெவால் தங்கம் வென்றிருந்தார். ஜூனியர் அணி உலக சாம்பியன் போட்டியில் சிறப்பாக செயல்படும் என இந்திய பாட்மிண்டன் சங்க பொதுச் செயலர் அஜய் சிங்கானியா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் இந்தியா-இலங்கை மோதின. இதில் இந்தியா 3-0 என்ற புள்ளிக் கணக்கில் இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close