சீன ஓபன் பேட்மிண்டன்: காலிறுதியில் பி.வி.சிந்து தோல்வி

  Newstm Desk   | Last Modified : 09 Nov, 2018 04:53 pm
pv-sindhu-lost-in-the-china-open-quarter-final

சீன ஓபன் பேட்மிண்டன் காலிறுதி சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வியடைந்தார். 

சீனாவில் சர்வதேச ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்திய வீராங்கனை சிந்து, சீனாவின் ஹீ பிங் ஜியோவுடன் மோதினார். முதல் செட்டில் 17 - 21 என இழந்த சிந்து, இரண்டாவது செட்டை 21-17 என கைப்பற்றினார்.  ஆனால் மூன்றாவது செட்டில் போராடி விளையாடிய சிந்து 15-21 என இழந்தார்.

சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த போட்டி முடிவில் சிந்து 17-21, 21-17, 15-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close