ஹாங் காங் ஓபன்: ஸ்ரீகாந்த் வெற்றி; சிந்து நாக் அவுட்

  Newstm Desk   | Last Modified : 15 Nov, 2018 08:57 pm
hong-kong-open-srikanth-beat-prannoy-sindhu-knocked-out

ஹாங் காங் ஓபன் பேட்மிண்டன் தொடரில், இந்திய நட்சத்திர வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த், மற்றொரு இந்திய வீரரான பிரணாயை வீழ்த்தி, காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். நட்சத்திர வீராங்கனை சிந்து, தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறினார். 

ஹாங் காங் ஓபன் பேட்மிண்டன் தொடரின், காலிறுதிக்கு முந்தைய சுற்றில், இந்திய வீரர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் பிராணாய் மோதினர். இரு வீரர்கள் மிக சிறப்பாக விளையாடிய இந்த போட்டியில், ஸ்ரீகாந்த் போராடி வென்றார். முதல் செட்டை 18-21 என்ற கணக்கில் பிரணாய் வென்றாலும், மீண்டு எழுந்து வந்த ஸ்ரீகாந்த், அடுத்த இரண்டு செட்களையும் 30-29, 21-18 என கைப்பற்றி வெற்றி பெற்றார். இந்த வெற்றியை தொடர்ந்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளார் ஸ்ரீகாந்த். 

மற்றொரு இந்திய வீரர் சம்வீர் வர்மா, எதிராளியான சீன வீரர் வாக் அவுட் கொடுத்ததை தொடர்ந்து, காலிறுதிக்கு முன்னேறினார். பெண்கள் பிரிவில், தென் கொரிய நாட்டை சேர்ந்த உலகின் 10ம் நிலை வீராங்கனை சங் ஜி ஹியூனிடம் 24-26, 20-22 என்ற நேர் செட் கணக்கில் தோற்று வெளியேறினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close