உலக பேட்மிண்டன் டூர்: இறுதிப் போட்டியில் பிவி சிந்து!

  Newstm Desk   | Last Modified : 15 Dec, 2018 06:49 pm
bwf-finals-pv-sindhu-into-finals

2018ம் ஆண்டின் உலக பேட்மிண்டன் இறுதி டூர் தொடரின் அரையிறுதி போட்டியில் ஆடிய இந்திய வீராங்கனை பிவி சிந்து, தாய்லாந்து வீராங்கனை இன்டனோனை நேர் செட் கணக்கில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார். 

2018ம் ஆண்டிற்கான உலக பேட்மிண்டன் இறுதி டூர் தொடரில், இந்திய நட்சத்திர வீராங்கனை பிவி சிந்து சிறப்பாக விளையாடி அரையிறுதி போட்டியில், தாய்லாந்து நாட்டை சேர்ந்த இன்டனோனுடன் மோதினார். ஆரம்பத்தில் இருந்தே சிந்து முழு ஆதிக்கம் செலுத்தி, இன்டனோனுக்கு நெருக்கடி கொடுத்தார். முதல் செட்டை, வெறும் 20 நிமிடங்களில், 21-16 என்ற கணக்கில் கைப்பற்றினார். இரண்டாவது செட்டில், இன்டனோன் விடா முயற்சி செய்து கடைசி வரை போராடினார். 25-23 என இரண்டாவது செட்டையும் கைப்பற்றி, நேர் செட்களில் வெற்றி பெற்றார் சிந்து. இந்த போட்டி, சுமார் 54 நிமிடங்கள் நீடித்தது.

இறுதிப் போட்டியில் உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நொசோமி ஓகுஹாராவுடன் சிந்து மோதுகிறார். 

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close