தரவரிசையில் 3வது இடத்திற்கு முன்னேறிய பி.வி.சிந்து

  Newstm Desk   | Last Modified : 21 Dec, 2018 08:13 am
bwf-rankings-pv-sindhu-jumps-three-spots

உலக பேட்மிண்டன் பைனல்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றதையடுத்து இந்திய வீராங்கனை பி.வி சிந்து மூன்று இடங்கள் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார்.

சீனாவில் நடைபெற்ற உலக பேட்மிண்டன் பைனல்ஸ் தொடரில் இந்திய வீராங்கனை பிவி சிந்து இறுதிப் போட்டியில் நொசோமி ஒகுஹாராவை 21-19, 21-17 என நேர்செட் கணக்கில் வீழ்த்தி முதன்முறையாக உலக பேட்மிண்டன் பைனல்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார். பிரேசிலில் நடைபெற்ற ஒலிம்பிக் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பிவி சிந்துவால், வெற்றி வாகை சூட முடியாமல் திணறி வந்தார். தற்போது இந்த வெற்றியின் மூலம் இறுதிப்போட்டி தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

சாம்பியன் கோப்பையை கைப்பற்றியதன் மூலம் உலக பேட்மிண்டன் தரவரிசையில் மூன்று இடங்கள் முன்னேறி 3வது இடத்தை பிடித்துள்ளார். மேலும் மற்றொரு இந்திய வீராங்கனையான சாய்னா 9வது இடத்தில் இருக்கிறார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close