ப்ரோ பேட்மின்டன் லீக்: சாய்னாவை வீழ்த்தினார் சூப்பர் சிந்து!

  Newstm Desk   | Last Modified : 02 Jan, 2019 06:37 am
sindhu-beats-saina-in-pbl-clash

ப்ரோ பேட்மின்டன் லீக் தொடரில் ஹைதராபாத் ஹன்டர்ஸ் அணி, நார்த் ஈஸ்டர்ன் வாரியர்ஸ் அணியை 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தியது. ஹன்டர்சின் இந்திய நட்சத்திர வீராங்கனை பிவி சிந்து மற்றொரு நட்சத்திர வீராங்கனையான சாய்னா நேவாலை வீழ்த்தினார்.

ப்ரோ பேட்மின்டன் லீக் தொடரில் ஹைதராபாத் ஹன்டர்ஸ் மற்றும் நார்த் ஈஸ்டர்ன் வாரியர்ஸ் அணிகள் நேற்று மோதின. இதில் முதலாவதாக நடைபெற்ற கலப்பு இரட்டையர் போட்டியில் ஹன்டர்ஸ் தோற்றது. அதைத் தொடர்ந்து அந்த அணியின் லீ ஹியுன் இல், வாரியர்ஸ் அணியின் தனோங்சக்கை வீழ்த்தினார்.
ட்ரம்ப் போட்டி என்பதால், இதில் ஹன்டர்ஸ் அணிக்கு இரண்டு புள்ளிகள் கிடைத்தது.

அதைத் தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி சிந்து மற்றும் சாய்னா நேவால் மோதினர். கடந்த இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்திருந்த சிந்து, புத்தாண்டை வெற்றிகரமாக துவக்க ஆர்வமாக இருந்தார். அதேநேரம் காயம் காரணமாக கடந்த இரண்டு போட்டிகளில் விளையாடாத சாய்னா நேவால், மீண்டும் பார்மை பிடிக்க முயன்றார். முதல் செட்டை சாய்னா நேவால் கைப்பற்றிய நிலையில், அதன்பின் பிவி சிந்து அட்டகாசமாக விளையாடி இரண்டாவது செட்டை கைப்பற்றினார். முழு உடல் தகுதி இல்லாத சாய்னாவால், மூன்றாவது செட்டில் தாக்கு பிடிக்க முடியவில்லை. 11-15, 15-9, 15-5 என சிந்து வென்றார்.

அதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் ஹன்டர்ஸ் அணி வெற்றி பெற்றதால் 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் வாரியர்ஸை வீழ்த்தியது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close