ப்ரோ பேட்மிண்டன் லீக் இறுதிப் போட்டியில் பெங்களூரு!

  Newstm Desk   | Last Modified : 12 Jan, 2019 06:03 am
pbl-bangalore-raptors-qualify-for-finals

ப்ரோ பேட்மிண்டன் லீக் தொடரின் அரையிறுதி போட்டியில், பெங்களூரு ராப்டர்ஸ் அவாதே வாரியர்ஸ் மோதிய போட்டியில், பெங்களூரு அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

ப்ரோ பேட்மிண்டன் லீக் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அரையிறுதிப் போட்டியில் நேற்று பெங்களூரு ராப்டர்ஸ் மற்றும் அவாதே வாரியர்ஸ் அணிகள் மோதின. கடந்த சீசனில் இறுதிப்போட்டி வரை சென்று, ஹைதராபாதுடன் தோற்ற பெங்களூரு, இந்த முறை நிச்சயம் கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற உறுதியோடு களமிறங்கியது.

பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த், முன்னாள் உலக நம்பர்-1 வீரரான சன் வான் ஹோ-வை 15-7, 15-10 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி பெங்களூருக்கு முன்னிலை கொடுத்தார். தொடர்ந்து 7 போட்டிகளில் ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு ஆடவர் ஒற்றையர் போட்டியில், பெங்களூரு அணியின் சாய் பிரனீத், அவாதேவின் லீ டோங் கியூனை 15-9, 15-4 என வீழ்த்தினார்.

அவாதே அணி, அஷ்வினி பொன்னப்பா மற்றும் மத்தியாஸ் கிறிஸ்டின்யசன் கலப்பு இரட்டையர் ஜோடியை தனது ட்ரம்ப் போட்டிக்காக தேர்வு செய்தது. இதில் அவர்கள், பெங்களூரின் மார்க்ஸ் எல்லிஸ் மற்றும் லாரன்ஸ் ஸ்மித்ஹ் ஜோடியை 15-7, 15-10 என வீழ்த்தி, 2 புள்ளிகளை பெற்று, 2-2 என்று போட்டியை சமன் செய்தனர்.

இறுதியில் பெங்களூரு அணியின் ட்ரம்ப் போட்டியில், ஹெண்ட்ரா செடியவான் - மொஹம்மது அசான் ஜோடி, அவாதாயின் கிறிஸ்டியன்சன் - யாங் லீ ஜோடியை வீழ்த்தி, பெங்களூரு இறுதி போட்டிக்கு செல்ல உதவினர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close