மலேசியா மாஸ்டர்ஸ்: காலிறுதியில் சாய்னா, கிடாம்பி ஶ்ரீகாந்த்

  Newstm Desk   | Last Modified : 18 Jan, 2019 09:15 am
saina-srikanth-enter-quarters-of-malaysia-masters

கோலாலம்பூரில் நடைபெற்று வரும் மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் சாய்னா நேவால் மற்றும் கிடாம்பி ஶ்ரீகாந்த் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறி உள்ளனர். 

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் கோலாலம்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையும், 7-ம் நிலையில் இருப்பவருமான சாய்னா நேவால் ஹாங் காங்கை சேர்ந்த புய் யின் யிப்பை எதிர்கொண்டார். இதில் சாய்னா 21-14, 14-21, 21-16 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். 

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்ரீகாந்த் கிதாம்பி ஹாங்காங்கின் வாங் விங் கி வின்செட்டை எதிர்கொண்டார். இதில் ஸ்ரீகாந்த் 23-21, 8-21, 21-18 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close