இந்தியாவில் பெண்களுக்கான மரியாதை அரிதாக இருக்கிறது- பி.வி.சிந்து

  Newstm Desk   | Last Modified : 19 Jan, 2019 11:39 am
no-adequate-respect-for-women-in-india-p-v-sindhu

இந்தியாவில் பெண்களை மதிப்பவர்கள் குறித்த எண்ணிக்கை அரிதாக இருக்கிறது என்று பேட்மிட்டன் வீராங்கனையான பி.வி.சிந்து தெரிவித்தார். 

‘பாலியல் வன்கொடுமையை முறியடிப்போம்’ என்ற தலைப்பில் தெலுங்கானா மாநிலம், ஹைதராபாதில் காவல்துறை சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், பி.வி.சிந்து சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசும்போது இவ்வாறு கூறினார். அவர் பேசியதாவது:

நாம் பெண்களை மதிக்க வேண்டும் என இந்தியாவில் மக்கள் பொதுவாக கருத்து தெரிவிப்பார்கள். ஆனால், உண்மையில் அதை கடைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை மிக அரிதானதாக இருக்கிறது. அதே சமயம், பிற நாடுகளில் பெண்களுக்கு உண்மையாகவே மதிப்பளிக்கப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. பாலியல் வன்கொடுமையையும் பெண்களுக்கு எதிரான பாகுபாடு என்றே கருத வேண்டும். உடல் ரீதியாக, சொல்லால் அல்லது எழுத்தால் என எந்த வகையிலும் பாலியல் துன்புறுத்தல் அளித்தாலும் கண்டனத்திற்குரியதே. பணியிடங்களில் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவது குறித்து ‘மீ டூ’ இயக்கம் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. படித்த ஆண், பெண் ஆகிய இருவரும் சமூகத்தில் செயலாற்ற வேண்டிய கடமைகள் குறித்து அந்த இயக்கம் கற்பித்திருக்கிறது என்றார் அவர்.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close