இந்தோனேசியா மாஸ்டர்ஸ்: காலிறுதியில் சிந்து, சாய்னா, ஶ்ரீகாந்த்

  Newstm Desk   | Last Modified : 25 Jan, 2019 09:42 am
indonesia-masters-pv-sindhu-saina-nehwal-and-kidambi-srikanth-enter-quarterfinals

ஜகர்த்தாவில் நடந்து வரும் இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர்களான பி.வி.சிந்து, சாய்னா நேவால் மற்றும் கிடாம்பி ஶ்ரீகாந்த் ஆகியோர் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். 

இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டனி தொடர் ஜகர்த்தாவில் நடந்து வருகிறது. இதில்  காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பி.வி.சிந்து இந்தோனேசியாவின் கிரேகோரியா மரிஸ்கா டுன்ஜங்கை எதிர்கொண்டார். இதில் பிவி சிந்து 23-21, 21-7 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் சாய்னா நேவால் மற்றொரு இந்தோனேசிய வீராங்கனை பிட்டிரியானி பிட்ரியானியை 21-17, 21-15 என வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். 

இதே போல ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஸ்ரீகாந்த் கிதாம்பி ஜப்பானைச் சேர்ந்த கென்டா நிஷிமோட்டாவை எதிர்கொண்டார். இதில் ஸ்ரீகாந்த் 21-14, 21-9 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close