சிந்துவை மீண்டும் வீழ்த்தினார் சாய்னா!

  விசேஷா   | Last Modified : 16 Feb, 2019 06:18 pm
saina-nehwal-beats-pv-sindhu-to-defend-women-s-singles-title

அசாம் மாநிலம் குவஹாத்தியில் நடைபெற்ற, மகளிருக்கான, தேசிய சீனியர் ஒற்றையர் பேட்மின்டன் இறுதி போட்டியில், பி.வி.சிந்துவை தோற்கடித்து, சாய்னா நேவல் மீண்டும் பட்டம் வென்றார்.

தேசிய அளவிலான பேட்மின்டன் சாம்பியன்சிப் போட்டி, அசாம் மாநிலம் குவஹாத்தியில் நடைபெற்றது. மகளிர் ஒற்றை சீனியர் பிரிவில், இரு பெரும் ஜாம்பவான்களிடையே போட்டி நிலவியது. 

தங்களுக்கு எதிராக களம் இறங்கியவர்களை மிக எளிதாக தோற்கடித்து, சர்வதேச அளவில் தடம் பதித்து வரும்,  சாய்னா நேவல் மற்றும் பி.வி.சிந்து ஆகியாேர் இடையே இறுதிப் போட்டி என முடிவானதால்,  ஆட்டம் பரபரப்பின் உச்சத்தை அடைந்தது. 

சிந்து, தனக்கே உரிய ஆக்ராேஷத்துடன் ஆட்டத்தை துவக்கினார். எனினும், சாய்னா, எப்போதும் போல் பொறுமையாகவே ஆடினார். முதல் சுற்றில், 21 - 18 என்ற புள்ளி கணக்கில், சாய்னா முன்னிலை பெற்றார். 

இரண்டாவது சுற்றில், சிந்து முன்னிலை பெறுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு ஏற்றவாறே அவரும் ஆட்டத்தை துவக்கினார். ஆனால், சுற்று முடிவில், 21 - 15 என்ற புள்ளிகளுடன் இரண்டாவது சுற்றையும், சாய்னா மீண்டும் கைப்பற்றினார். 
இதையடுத்து, சாய்னா நேவல் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம், சாய்னா நேவல், நான்காவது முறையாக தேசிய அளவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். சிந்துவை, ஏற்கனவே ஒரு முறை பைனலில் தோற்கடித்துள்ள சாய்னா, தற்போது இரண்டாவது முறையாகவும் வெற்றி கண்டுள்ளார். 

newstm.in


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close