இங்கிலாந்து ஓபன்: சாய்னா, ஸ்ரீகாந்த் காலிறுதிக்கு முன்னேற்றம்

  Newstm Desk   | Last Modified : 08 Mar, 2019 11:03 am
all-england-open-saina-srikanth-into-qfs

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடரின் ரவுண்ட் ஆப் 16 போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் மற்றும் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் போராடி வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினர்.

இங்கிலாந்து பேட்மிண்டன் ஓபன் தொடரின் மகளிர் ஒற்றையர் சுற்றுப் போட்டியில், இந்திய வீராங்கனை சாய்னா நேவால் டென்மார்க் வீராங்கனை லைன் க்ஜார்ஸ்பெல்ட் உடன் மோதினார். 51 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியில், 8-21, 21-16, 21-13 என்ற செட் கணக்கில் சாய்னா போராடி வெற்றி பெற்று, காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில், இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் இந்தோனேசியாவை சேர்ந்த ஆசிய சாம்பியன் ஜானதான் கிறிஸ்டியுடன் மோதினார். நடுவில் சரிவை கண்ட ஸ்ரீகாந்த், பின்னர் சிறப்பாக விளையாடி மீண்டு வந்து கிறிஸ்டியை 21-17, 11-21, 21-12 வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

அடுத்த சுற்றில் உலகின் எட்டாம் நிலை வீராங்கனையான தாய்பேயை சேர்ந்த தாய் சூ யிங்கை சாய்னா எதிர்கொள்கிறார். கடந்த 12 போட்டிகளில் சாய்னாவால் தாயை ஒருமுறை கூட வீழ்த்த முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close