இந்திய ஓபன் இறுதிக்குள் போராடி நுழைந்த ஸ்ரீகாந்த்!

  Newstm Desk   | Last Modified : 30 Mar, 2019 06:49 pm
kidambi-srikanth-enters-indian-open-finals

இந்தியன் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய நட்சத்திர வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த், சீனாவின் ஹுவாங் யூக்சியாங்கை 14-21, 21-16, 21-19 என்ற செட் கணக்கில் போராடி வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.

புதுடெல்லியில் நடைபெற்று வரும் இந்தியன் ஓபன் பேட்மிண்டன் தொடரின் அரையிறுதிப் போட்டியில், இந்திய நட்சத்திர வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த், சீனாவின் ஹுவாங் யூக்சியாங்குடன் மோதினார். இந்த போட்டியில், ஹுவாங் சிறப்பாக விளையாடி முதல் செட்டை அபாரமாக கைப்பற்றினார். ஆனால், விடாமுயற்சி செய்த ஸ்ரீகாந்த், அடுத்த இரண்டு செட்களை போராடி கைப்பற்றி, வெற்றி பெற்றார். 

மற்றொரு அரையிறுதிப் போட்டியில், இந்திய வீரர் பருப்பள்ளி கஷ்யப்பை, உலகின் 4ம் நிலை வீரரான டென்மார்க்கை சேர்ந்த விக்டர் ஆக்சல்சன் வீழ்த்தினார். இதனால் இறுதிப் போட்டியில் நாளை, ஸ்ரீகாந்த், ஆக்சல்சன்னை சந்திக்கிறார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close