சீன ஓபன் பேட்மிண்டன்: வெளியேறினார் பி.வி.சிந்து

  Newstm Desk   | Last Modified : 19 Sep, 2019 04:16 pm
chinese-open-badminton-exit-pv-sindhu

சீன ஓபன் பேட்மிண்டன் தொடரில் இருந்து இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெளியேறினார்.

இந்த தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, தாய்லாந்தின் போர்ன்பவீ சோச்சுவோங் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், சோச்சுவோங் 21-12, 13-21,19-21 என்ற செட்கணக்கில் சிந்துவை வீழ்த்தினார். இதையடுத்து, இந்த தொடரில் இருந்து சிந்து வெளியேறினார்.

முன்னதாக, இந்தியா வீராங்கனை சாய்னா நேவால், தாய்லாந்து வீராங்கனை புசனன் ஓங்பாம்ருங்பானிடம் 10-21, 17-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.

நாக்அவுட் சுற்று போட்டிகளில் பெண்கள் பிரிவில் இருவரும் வெளியேறியதால், சீனா ஓபன் பேட்மிண்டன் தொடரை வெல்லும் வாய்ப்பு கனவாகிபோனது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close