முதல் சுற்றோடு வெளியேறிய சிந்து..ரசிகர்கள் தொடர்ந்து அதிர்ச்சி..!

  Newstm Desk   | Last Modified : 25 Sep, 2019 06:09 pm
sindhu-s-first-round-left-shocked

கொரிய ஓபன் பேட்மிண்டன் தொடரில், இந்திய வீராங்கனை பி.வி.சிந்து முதல் சுற்றோடு வெளியேறி, ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.

கொரியாவின் இன்சியோன் நகரில் கொரிய ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று  வருகிறது. இதில், இன்று நடைபெற்ற முதல் சுற்று போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, அமெரிக்க வீராங்கனை பெய்வன் ஜாங்கை எதிர்கொண்டார். இதில், சிந்துவை  21-7, 22-24, 15-21 என்ற செட் கணக்கில் ஜாங் வீழ்த்தினார். இதனால், இந்த தொடரில் இருந்து முதல் சுற்றோடு சிந்து வெளியேறினார்.

உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற சிந்து, கடந்த வாரம் நடைபெற்ற சீனா ஓபன் பேட்மிண்டன் தொடரில், இரண்டாவது சுற்றிலும், தற்போது இந்த தொடரில் முதல் சுற்றிலும் வெளியேறி, அவரது ரசிகர்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சியை கொடுத்துள்ளார் சிந்து.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close