தென்னாப்பிரிக்காவில் ஜெயிப்பது நிச்சயம் - ரவி சாஸ்திரி உறுதி

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 25 Dec, 2017 10:49 pm

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடரையடுத்து இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு சென்று அங்கு மூன்றுவிதமான போட்டிகளிலும் விளையாட முடிவு செய்துள்ளது.

அதன்படி இரு அணிகளும் முதல் போட்டியில் ஜனவரி 5ல் களம் காண்கின்றன. இந்திய அணியினை பொறுத்தவரை இதுவரைக்கும் எந்த தென்னாப்பிரிக்க கிரிக்கெட் தொடரிலும்  வெற்றிபெற்றதே கிடையாது எனும் சோக சாதனையில் களம் காணவிருக்கிறது. அதே நேரத்தில் இந்திய அணி தொடர்ந்து 16 கிரிக்கெட் போட்டித்தொடரை வென்று செம ஃபார்மில் இருக்கிறது. 

இந்நிலையில், பயிற்சியாளர் ரவி சாஸ்திரி,  "தென்னாப்பிரிக்காவில் இதுவரை இந்திய அணி தொடரை வென்றது இல்லை எனும் மோசமான ஒரு சாதனையை படைத்திருக்கிறது. அதை கோலி தலைமையிலான இந்திய அணியினர் முறியடித்து இந்த 25 வருட சாதனையை தகர்த்தெறிவர் " என்று கூறியிருக்கிறார்.

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் நிர்வாகத்தினர் இந்த தொடருக்கு புதியதொரு பெயராக ஃபிரீடம் சீரீஸ் என்று வைத்திருப்பது குறிப்பிடதக்கதாகும்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close