• வாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி!
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்
  • 5 மாவட்டங்களில் கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • கூட்டத்தில் சிக்கிய ராகுல் : மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

தோனியின் ஸ்டைலே தனி... புகழும் பயிற்சியாளர்!

  நந்தினி   | Last Modified : 13 Feb, 2018 01:21 pm

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் என்றென்றும் ஒரு நிலையான இடத்தை 'கேப்டன் கூல்' எம்.எஸ். தோனி பிடித்திருப்பார். ஒரு சிறந்த பேட்ஸ்மேன், கேப்டனை தாண்டி அவருடைய சிறப்பு என்றால் அவரது விக்கெட் கீப்பிங் என்று தான் சொல்ல வேண்டும். மின்னல் வேகத்தில் எதிரணி வீரர்களை அவுட் செய்வது என்பது அவருக்கு கைவந்த கலை. அதை ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரும் ஏற்றுக் கொள்ள மறுப்பதில்லை.

316 ஒருநாள் போட்டிகளில் 106 ஸ்டம்பிங் மற்றும் 295 கேட்ச்கள் என்று மொத்தம் 401 வீரர்களை அவுட்டாகிய முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்துள்ளார் தோனி. இவரது விக்கெட் கீப்பிங்கிற்கே தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கும். அந்த வகையில் அனைவரையும் தனது விக்கெட் கீப்பிங் ஸ்டைலிலால் கவர்ந்த தோனி, இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதரையும் ஈர்த்துள்ளார்.

அவர் கூறியதாவது: தோனியின் விக்கெட் கீப்பிங் சுத்தமான இலக்கியத்தரம் வாய்ந்தது இல்லை என்றாலும், அது அவருக்கு பிரமாதமாக வேலை செய்கிறது. பயிற்சி எடுக்கும் போது, அவரது விரைவான ஸ்டம்பிங் மற்றும் ஃபிளாஷ் ரன் அவுட்கள் நம்மை வியக்க வைக்கும்.

தோனி, தனக்கென்று ஒரு ஸ்டைலை வைத்துள்ளார். அது அவரை வெற்றியடையச் செய்கிறது. அவரின் விக்கெட் கீப்பிங் ஸ்டைலை நாம் அனைவரும் சேர்ந்து ஆய்வு செய்ய வேண்டும் என்று தான் நினைக்கிறன். அதை நான், 'தி மஹி வே' (தோனி வழி) என்று தான் குறிப்பிடுவேன். அவருடைய கீப்பிங்கில் இருந்து நாம் அதிகம் கற்க வேண்டும். இளம் விக்கெட் கீப்பர்கள், அவர்கள் நினைக்க முடியாத அளவிற்கு, தோனியிடம் இருந்து தெரிந்துகொள்ள ஏராளமான விஷயங்கள் இருக்கின்றது.

தோனி, அவருடைய வழியில் மிகவும் தனித்து இருக்கிறார். கச்சிதமாக எப்படி அனைத்து கிரிக்கெட் வீரர்களும் தனித்து இருக்க வேண்டுமோ அப்படி. அவருக்கு சிறந்த கைகள் இருக்கின்றன. நிச்சயம் அவர் ஒரு சிறந்த விக்கெட் கீப்பர் தான். அவருடைய கைகள் மின்னல் வேகத்தில் செயல்படும் என்பது நாம் அறிந்ததே. அது அவருடைய இயற்கை, ஆனால் அதை பார்க்கும் நமக்கு சிறப்பு. இந்த திறமை இல்லாத ஒருவருக்கு, அங்கு மிகப்பெரிய சவால் காத்திருக்கும்.

எங்களுடைய முழு முயற்சியும் ஆட்டத்தின் நிலையை உற்று பார்த்து, அதில் சிறப்பாக செயல்படும் வீரர்களை கண்டறிந்து, மற்ற வீரர்களுக்கு வாய்ப்பளிப்பது தான். இதில், தோனி இடம்பெற மாட்டார். போட்டியை கடைசி வரை எடுத்துச் செல்லும் பொறுப்பு தோனியிடம் இருக்கிறது. எங்களுக்கு போட்டியை முடிக்கும் சிறப்பான வீரர்கள் அதிகள் தேவை. மேலும், அதற்காக வீரர்களுக்கு பயிற்சி அளிக்கிறோம்.

அதே சமயம், 5, 6, 7 வரிசையில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் வீரர்களும் எங்களுக்கு தேவையாக இருக்கிறது. 5,6,7 இடங்களில் வீரர்கள் மாறிக் கொண்டிருப்பதாக நீங்கள் காணலாம். உலக கோப்பை போட்டிக்குள் இந்த இடங்களில் சிறந்து விளங்கும் வீரர்களை நாங்கள் தேர்வு செய்துவிடுவோம்.

Advertisement:
[X] Close