இனி இந்தியாவும் பகலிரவு டெஸ்ட்டில் பங்கேற்கும் ?

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 17 Jan, 2018 08:38 pm

பகலிரவு டெஸ்ட் போட்டிகளை இந்தியாவில் நடத்துவது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என பிசிசிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட்டில் செல்வாக்குமிக்க நிர்வாகமாக பிசிசிஐ திகழ்கிறது. ஆகவே ஐசிசி விதிக்கிற சில விதிகளை இந்திய அணி பின்பற்றுவது இல்லை. பிசிசிஐக்கு தொடர்ந்து கொஞ்சம் சலுகை வழங்கப்படுவது வழக்கம். 3வது அம்பயரிடம் முறையிடுகிற முறை கூட இந்திய கிரிக்கெட் அணியால் அவ்வளவு சீக்கிரம் ஏற்கப்படவில்லை.
 அந்த வகையில் தற்போதுதான் இந்திய அணி பகலிரவு டெஸ்ட் போட்டி விளையாடுவது குறித்து அலோசனையில் இறங்கியிருக்கிறது. ஆனால் ஐசிசி கட்டுப்பாட்டில் உள்ள எல்லா நாடுகளும் பகலிரவு டெஸ்ட் போட்டிகளை பின்பற்ற துவங்கிவிட்டது.

இந்நிலையில் விரைவில் பகலிரவு டெஸ்டில் இந்திய அணி பங்கேற்பது மற்றும் போட்டிகளை நடத்துவது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என பிசிசிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close