ஃபிட் ஏஞ்சலோ மேத்தியூஸ் மீண்டும் களம் இறங்குகிறார்!

  நந்தினி   | Last Modified : 13 Feb, 2018 12:24 pm


வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, இரண்டு டெஸ்ட் மற்றும் டி20 போட்டியில் பங்கேற்றுள்ளது. இதில், டெஸ்ட் தொடரை இலங்கை அணி 1-0 என கைப்பற்றியது. இந்த டெஸ்ட் தொடரில் இருந்து காயம் காரணமாக குறுகிய ஓவர்களின் இலங்கை கேப்டன் ஏஞ்சலோ மேத்தியூஸ் விலகினார். 

கணுக்கால் காயம் காரணமாக கடந்த ஒரு வருடமாக அவதிப்பட்டு வருகிறார் மேத்தியூஸ். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு, தனது கேப்டன் பதவியை மேத்தியூஸ் ராஜினாமா செய்திருந்தார். ஆனால், அவரை குறுகிய ஓவர் போட்டிகளின் கேப்டனாக மீண்டும் இலங்கை கிரிக்கெட் வாரியம் நியமித்தது. அவரது கேப்டன்ஷிப்பால், அணி மீண்டும் சிறப்பாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொடர்ந்து காயத்தால் இலங்கை அணி பங்கேற்கும் தொடரில் இருந்து அவ்வப்போது விலகியே இருந்தார். 


இதனிடையே வங்கதேச தொடரில் இருந்தும் விலகிய அவர், நாடு திரும்பினார். அங்கு தேசிய புனர்வாழ்வு செயல்முறையை முடித்துவிட்ட அவர், வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்க திட்டமிட்டார். ஆனால், காயத்தில் இருந்து விடுபட்ட உடனே களத்தில் இறங்குவது ஆபத்தாக முடியும் என்று மேத்தியூஸுக்கு நிபுணர்கள் அறிவுறுத்தினர். 

இதனால், வங்கதேசம், இந்தியா, இலங்கை ஆகிய அணிகள் விளையாட இருக்கும் டி20 முத்தரப்பு தொடருக்கு திரும்ப மேத்தியூஸ் திட்டமிட்டுள்ளார். மார்ச் 6ம் தேதி நடக்க இருக்கும் துவக்க போட்டியில், இந்தியா- இலங்கை அணிகள் மோதுகின்றன. இந்த முத்தரப்பு தொடர், இலங்கையின் 70-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close