• முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்
  • 5 மாவட்டங்களில் கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • கூட்டத்தில் சிக்கிய ராகுல் : மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்
  • குற்றவாளிகளை தண்டிக்கவே சிலை கடத்தல் வழக்கு சிபிஐக்கு மாற்றம் - தமிழக அரசு

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு திரும்பினார் ஷேன் வார்னே

  நந்தினி   | Last Modified : 13 Feb, 2018 03:46 pm


ஐபிஎல்-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆலோசகராக ஷேன் வார்னே நியமிக்கப்பட்டுள்ளார். 

2008ம் ஆண்டு ஐபிஎல் அறிமுகமான சீசன் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தலைமை தாங்கி, கோப்பையை வென்று கொடுத்தவர் ஷேன் வார்னே. அதன் பிறகு, அந்த அணிக்காக பயிற்சியாளர் பொறுப்பிலும் அவர் செயல்பட்டு இருந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு ராஜஸ்தான் அணி ஐபிஎல்-ல் பங்கேற்க தடை பெற்றது. இதனை தொடர்ந்து, தடைக்கு பிறகு மீண்டும் ராஜஸ்தான் அணி களமிறங்கியுள்ளது. 

இம்மாத துவக்கத்தில் வார்னே தனது ட்விட்டர் பக்கத்தில், "ரசிகர்கள் உங்களுக்காக இந்த வாரம் ஒரு ஆச்சரியமூட்டும் அறிவிப்பை வெளியிட காத்திருக்கிறேன். அது, ஐபிஎல் 2018 பற்றியது தான்" என்று ட்வீட் செய்திருந்தார். 


இந்த நிலையில், இன்று அந்த தகவலை வார்னே உறுதி செய்துள்ளார். "ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு, ஆலோசகராக திரும்பியிருப்பது மகிழ்ச்சியை தருகிறது" என்று ட்வீட் செய்திருக்கிறார். 2008-2011 வரை அணிக்கு தலைமை தங்கிய வார்னே, 52 போட்டிகளில் விளையாடி 56 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். 

சமீபத்தில் நடந்த ஐபிஎல் ஏலத்தில் ராயல்ஸ் அணி மிகப்பெரிய தொகையை வீரர்கள் மீது செலுத்தியது. இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ரூ.12.5 கோடிக்கும், ஜெயதேவ் உனட்கட் ரூ.11.5 கோடிக்கும் வாங்கப்பட்டனர். ஸ்டீவ் ஸ்மித், அஜின்க்யா ரஹானே ஆகிய முன்னணி பேட்ஸ்மேன்களும் அணியில் இடம் பெற்றுள்ளனர். 

Advertisement:
[X] Close