• வாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி!
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்
  • 5 மாவட்டங்களில் கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • கூட்டத்தில் சிக்கிய ராகுல் : மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

ரோஹித் ஷர்மா; குல்தீப் யாதவ் அசத்தல்; தொடரை கைப்பற்றியது இந்தியா!

  SRK   | Last Modified : 14 Feb, 2018 10:44 am


இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற 5வது ஒருநாள் போட்டியில், இந்தியா 73 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. 

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் மர்க்ரம், இந்தியாவை பேட் செய்ய அழைத்தார். முதலில் பேட் செய்த இந்திய அணியின் துவக்க வீரர் ரோஹித் ஷர்மா மற்றும் கேப்டன் விராட் கோலி இணைந்து 105 ரன்கள் சேர்த்தனர். ஒருநாள் அரங்கில் ரோஹித் ஷர்மா தனது  சதத்தை பூர்த்தி செய்து 115 ரன்கள் எடுத்தார். 

50 ஓவர்கள் முடிவில் இந்திய 7 விக்கெட்கள் இழந்து 274 ரன்கள் எடுத்தது. பின்னர், களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் துவக்க வீரர் ஹஷிம் ஆம்லா 71 ரன்கள் அடித்தார். அதன்பின் தென் ஆப்பிரிக்கா தடுமாறியது. 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்திருந்தபோது க்ளாஸன் வந்து அதிரடியாக விளையாடினார். 

கடைசி நேரத்தில் சூப்பராக பந்துவீசிய குல்தீப் யாதவ், க்ளாஸன், பெலுக்வாயோ, ரபாடா , ஷம்சி என்ற தொடர்ந்து 4 விக்கெட்களை எடுத்தார். 201 ரன்கள் எடுத்திருந்தபோது, தென் ஆப்பிரிக்கா அனைத்து விக்கெட்களையும் இழந்தது. 73 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரை 4-1 என கைப்பற்றியது. 

Advertisement:
[X] Close