சி.எஸ்.கே அணியில் பேசிக் கொண்டே இருப்பவர் இவர் தான்- ரெய்னாவின் கலாட்டா

  நந்தினி   | Last Modified : 30 May, 2018 05:42 pm
raina-reveals-about-csk-s-best-batsman-entertainer-and-talkative-person

2018 ஐ.பி.எல் கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தட்டிச் சென்றது. இதன் மூலம் வயதான அணியினர் என்று விமர்சனம் செய்த அனைவரது வாயையும் சென்னை அணி அடைத்தது. இந்த வெற்றிகரமான அணியில் இடம் பெற்றுள்ள சுரேஷ் ரெய்னா, ஒரு சீசனிலும் 350 ரன்களுக்கு கீழ் அடித்ததில்லை. ஐ.பி.எல்-ல் அதிக ரன் எடுத்தவர்கள் பட்டியலில் முன்னிலையில் இருப்பவர் ரெய்னா. இது தவிர பீல்டிங்கிலும் பல விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். 

இந்த நிலையில், ரெய்னாவிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மிகச்சிறந்த பொழுதுபோக்காளர் யார் என்று கேட்கப்பட்டது. அதற்கு மறுகணமே அவரிடம் இருந்து வந்த பதில், பிராவோ. பிராவோ தன்னுடைய இசையினாலையே பல ரசிகர்கள் கூட்டத்தை தன்பக்கம் வைத்துள்ளார். ட்ரெஸ்ஸிங் ரூமில் அவர் அடிக்கும் லூட்டியே அவர் தான் அணிக்கு மிகப்பெரிய பொழுபோக்காக இருக்கிறார் என்பதை நாம் அறிவோம்.

இது தவிர, அணியில் யார் பேசிக் கொண்டே இருப்பார் என்று கேட்டதற்கு, அணியிலேயே மிகவும் பேசுவது ரவிந்தர ஜடேஜா தான் என்றார். 

ரெய்னாவை பொறுத்தவரை, அணியில் போர் அடிக்கும் வீரர்கள் என்று யாருமில்லை. ஆனால், தனது அணி குறித்து ஒரு முக்கிய விஷயத்தை அவர் தெரிவித்தார். அதாவது, தனது அணி வீரர்கள் பேருந்திலோ, விமானத்திலோ பயணம் செய்யும் போது, எப்போதும் ஹெட்-போன் மாட்டிக் கொண்டே இருப்பார்கள் என்று கூறினார். அணியின் ஹீரோ ஷேன் வாட்சன் எப்போதும் பேருந்துக்கு தாமதமாக தான் வருவார். பேருந்துக்கு மட்டுமல்ல எந்த இடத்திற்கு சென்றாலும் அவர் தாமதமாக தான் வருவாராம். 

அணியில் பிரபலமானவர் சாம் பில்லிங்ஸ். ஹர்பஜன் சிறந்த ஜோக்குகளை அடிப்பார். அணியின் சிறந்த பேட்ஸ்மேன் யார் என்றதற்கு கேப்டன் எம்.எஸ். தோனியை குறிப்பிட்டார். 

என்னதான் ஐ.பி.எல் போட்டியில் அனைவர்க்கும் பிரபலமான தேர்வாக ரஷீத் கான் இருந்தாலும், புவனேஸ்வர் குமார் மிகவும் திறமையுடைய வீரர் என்று ரெய்னா கூறினார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close