அம்பத்தி ராயுடுவின் சிறப்பான ஆட்டத்திற்கு கோலி தான் காரணமாம்!

  Newstm Desk   | Last Modified : 01 Jun, 2018 01:37 pm
ambati-rayudu-borrows-bat-from-virat-kohli-every-year

விராத் கோலி தான் தனது சிறப்பான ஆட்டத்திற்கு காரணம் என்று அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார். 
ஐபிஎல் 2018ல் சென்னை அணிக்காக பேட்டிங்கில் அதிரடியை காட்டியவர் அம்பத்தி ராயுடு. சென்ற ஆண்டு வரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வந்த அவர், இந்த வருடம் தான் தனது முதல் ஐபிஎல் சதத்தை அடித்தார் . 
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரை ரூ.2.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இந்தாண்டு ஐபிஎல் தொடரில் அவர் 16 போட்டிகளில் 602 ரன்கள் அடித்திருக்கிறார். அதுவும் பவுளிங்கில் இந்தாண்டு எதிரணியினருக்கு தலைவலியாக இருந்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சதம் எடுத்தார். ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியதால் அவருக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணியில் இடம் கிடைத்துள்ளது. 

இந்நிலையில் அவர்  தனது அதிர்ஷ்டமான நண்பர் குறித்து சமீபத்தில் பேசி உள்ளார். அவர், ஒவ்வொரு வருடமும் விராட் கோலியிடம் இருந்து பேட் வாங்கி அதில் விளையாடுவதை வழக்கமாக வைத்துள்ளாராம். விராட் கொடுக்கும் பேட் தனக்கு மிகவும் ராசியானது என்று அம்பத்தி ராயுடு கூறினார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Loading...
Advertisement:
[X] Close