அவ்வளவு திறமை இருந்தும்... வேர்ல்ட் கப் ஜெயிக்க முடியாத வீரர்கள்!

  நந்தினி   | Last Modified : 31 May, 2018 07:13 pm
unlucky-superheroes-who-never-won-world-cup

கிரிக்கெட் போட்டிகளில் வீரர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி பல சாதனைகளை படைத்துள்ளனர். கிரிக்கெட்டுக்காக அவர்களின் அர்ப்பணிப்பு வரலாறுகள் சொல்லும். இப்படியான சில லெஜெண்ட்கள் உலகளவில் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் அனைவரும் தேசிய அணிக்காக அரும்பாடுபட்டவர்கள். ஆனால், அப்படிப்பட்ட அந்த ஜாம்பவான்களுக்கும் மிகப்பெரிய வருத்தங்கள் உள்ளன. அதுவும் அணியில் இடம் பெற்றியிருக்கும் போதே சில சாதனைகளை நாம் நிகழ்த்திவிட வேண்டுமென்ற ஆதங்கம் அவர்களுக்குள் இருக்கும். 

ஆனால், அது நிறைவேறுவதற்குள் ஓய்வு என்னும் முடிவுக்கு தள்ளப்பட்டுவிடுவார்கள். சமீபத்தில் ஏபி டி வில்லியர்ஸின் ஓய்வு முடிவு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியது. 360 டிகிரி பேட்ஸ்மேனான அவர் திடீரென ஓய்வு முடிவை அறிவித்தார். அவரால் பல வெற்றிகளை சந்தித்த தென் ஆப்பிரிக்கா அணி, அவர் தலைமையில் உலக கோப்பையை வெல்லவில்லை என்ற வருத்தம் உள்ளது. 2019ம் ஆண்டு உலக கோப்பை போட்டி நடக்க இருக்கிறது. அதற்கு இன்னும் சரியாக ஓராண்டு உள்ளது. அதற்கான கவுண்டவுன் இன்று தொடங்கியது. தற்போது உலக கோப்பையை வெற்றி கேப்டன்களாக இருந்தும் பெறாத லெஜெண்ட்களை காண்போம்.

ஏபி டி வில்லியர்ஸ்: 

34 வயதான 360 டிகிரி பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ், களத்தில் எவ்வாறு செயல்படுவார் என்று சொல்லி தெரியவேண்டியதில்லை. மைதானத்தின் அனைத்து இடங்களிலும் இவரது ஷாட்கள் தெறிக்கும். உள்ளூரில் மட்டுமில்லாமல் உலகளவில் இவருக்கென்று ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. பேட்ஸ்மேன் மட்டுமின்றி இவர் ஒரு சிறந்த விக்கெட் கீப்பரும் கூட. 228 போட்டிகளில் 9558 ரன்கள். சராசரி 53.5. 50 அரைசதம். 24 சதம். இதெல்லாம் இருந்தும் அவர் தலைமையில் தென் ஆப்பிரிக்கா உலக  கோப்பையை வெல்லவில்லை.

2015ம் ஆண்டு கோப்பையை வெல்ல கிட்டத்தட்ட தென் ஆப்பிரிக்கா நெருங்கிவிட்ட நிலையில், கடைசி நேரத்தில் கோப்பை கைநழுவியது துரதிஷ்டமே. இந்த நிலையில், 2019 உலக கோப்பை போட்டியில் பங்கேற்காமல் அதற்குள் ஓய்வு முடிவை திடீரென அறிவித்தது அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏபி டி, உலக கோப்பையை கைப்பற்றுவார் என்று நினைத்திருந்த நேரத்தில் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார். 

பிரைன் லாரா:

1990-களில் சிறந்த பேட்ஸ்மேன் பிரைன் சார்லஸ் லாரா என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. சச்சின் டெண்டுல்கரை விட சிறந்தவர் என்று மக்களும், வல்லுநர்களும் வருணித்திருந்தனர். ஒட்டுமொத்த வெஸ்ட் இண்டீஸ் அணியையும் தனது தோளில் சுமந்தவர் லாரா. அந்த அணியின் வெற்றிக்காக கடுமையாக உழைத்தவர். களத்தில் அவரது ஸ்டைல், திறன், நேர்த்தி அனைவரையும் கவரும் விதத்தில் இருக்கும்.

299 ஒருநாள் போட்டிகளில், 10405 ரன். சராசரி 40.13. 19 சதம். 63 அரைசதம். ஒருநாள் போட்டியின் லெஜெண்டாக திகழ்ந்தார். உலக  கோப்பையை கையில் ஏந்தும் அதனை தகுதியும் இருந்தாலும் உலக கோப்பையை இவரது கிரிக்கெட் வாழ்க்கையில் அவர் ஏந்தியதில்லை என்பது வருத்தத்திற்குரிய செய்தியாகும். 2007ம் ஆண்டு தனது சொந்த நாட்டில் நடந்த உலக கோப்பை போட்டியிலேயே குரூப் சுற்றுடன் லாரா அணி வெளியேறி இருந்தது. 

ஐகியூஸ் கல்லிஸ்: 

கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த ஆல்-ரவுண்டர் என்று போற்றப்பட்டவர். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் 250 விக்கெட் மற்றும் 10,000 ரன்களுக்கு மேல் எடுத்தவர். பேட்டிங், பௌலிங், பீல்டிங் என அனைத்திலும் இவரை போன்று ஒரு வீரர் எல்லா அணிகளுக்கும் வேண்டும் என்பது அனைவரது ஆசை. உண்மையை சொல்லப்போனால், இவருக்கு ஈடுஇணை யாருமில்லை.

1999ம் ஆண்டில் கல்லிஸின தென் ஆப்பிரிக்கா அணி, அரையிறுதியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. தோற்றாலும் அப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட அவரை ரசிகர்கள் என்றும் மறந்திருக்க மாட்டார்கள். தற்போது வருங்கால சந்ததியினரை தனது பயிற்சியால் ஊக்குவித்து வருகிறார் கல்லிஸ். 

சௌரவ் கங்குலி:

பெரும்பாலும் இவரை கங்குலியை விட 'தாதா' என்று கூறினால் தான் படக்கென்று நியாபகத்து வருவார். வெளியுலகில் கடவுள் என்று போற்றப்படும் இவர், ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் சச்சின் டெண்டுல்கருடன் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பில் சிறந்து விளங்கியவர் என்ற பெயர் பெற்றுள்ளார். அவருடைய அர்ப்பணிப்பு, கடின உழைப்பே இவர்களுக்கு லெஜெண்ட் என்ற பெயரை பெற்று தந்துள்ளது. மிகுந்த உத்வேகத்தை அளிக்கக்கூடிய கேப்டன் மற்றும் வீரராவார். பல இளம் வீரர்களுக்கு அவரால் எதிர்கால வாய்ப்புகள் கிடைத்துள்ளன.

பலருக்கும் முன்னோடியாக இருக்கும் அவர், 2000ல் மேட்ச் பிக்சிங் பிரச்னையில் சுக்குநூறாகி கிடந்த இந்திய அணியை முழுமையாக மாற்றினார். 2011ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்த யுவராஜ் சிங், ஜாஹீர் கான், ஹர்பஜன் சிங், விரேந்தர் சேவாக் போன்றோர் தாதாவின் கேப்டன்ஷிப்பில் இருந்து வளர்ந்தவர்கள். 2003ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் சிறப்பாக செயல்பட்டும் ஆஸ்திரேலியாவிடம் இந்திய தோல்வி கண்டது. 2007ம் ஆண்டும் அந்த லெஜெண்டால் கையில் உலக கோப்பையை எந்தவில்லை. இருப்பினும் கிரிக்கெட் வரலாற்றில் இவரது பெயர் என்றும் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

ராகுல் ட்ராவிட்:

பொதுவாக டெஸ்ட் வீரர் என்று குறிப்பிடப்பட்டாலும், இவரது நேர்த்தியான ஆட்டம் ஒருநாள் போட்டியிலும் இவரை ஆளவைத்தது. சச்சின்- சௌரவ் உடன் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பிலும் அசத்தினார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தனியாளாக நின்று பல போட்டிகளை வென்று கொடுத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக கேட்ச்கள் பிடித்த வீரர், உண்மையிலேயே ஒரு சிறந்த லெஜெண்ட் என்பதை நமக்கு உணர்த்த செய்கிறது. தற்போது தனது திறமைகளை கொண்டு இளம் வீரர்களை வளர்த்து வருகிறார்.

இந்திய யு-19 அணி சமீபத்தில் உலக கோப்பையை கைப்பற்ற இவரது பயிற்சி முக்கிய பங்கு வகிக்கும். ஆனால், 2007ம் ஆண்டு அவருடைய நான்காவது உலக கோப்பை போட்டியில் விளையாடும் போது, இந்திய அணி லீக் சுற்றிலேயே வெளியேறியது விமர்சனங்களுக்கு வழிவகுத்தது. இருப்பினும், அவருடைய தரம் என்றும் உயர்ந்தே நிலைத்து நிற்கும். 314 ஒருநாள் போட்டிகளில் 10,000 ரன்கள் அடித்தும் உலக கோப்பையை கையில் எந்த முடியவில்லை. 

உலக கோப்பையை வெல்லாமல் ஓய்வு பெற்ற வீரர்கள் லிஸ்டில் சேராமல் கடைசி நேரத்தில் தப்பினார் சச்சின் டெண்டுல்கர். 2011ம் ஆண்டு ஓய்வு பெறுவதற்கு முன்பு உலக கோப்பையை கையில் ஏந்த சச்சின் டெண்டுல்கருக்கு வாய்ப்பு கிடைத்தது குறிப்பிடத்தக்க அம்சமாகும். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close